தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
Also Read | துணிவு படத்தில் நடிகர் பிரேம் குமார்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக்..
தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.
இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை இயக்கினார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தற்போது நடிகர் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் & யுவன் ஷங்கர் ராஜா விழா மேடையில் தோன்றி பேசினர். அப்போது பேசிய பா. ரஞ்சித், "இளையராஜா இசையை கேட்கும் போது ஏற்படும் உணர்வு தான் யுவன் ஷங்கர் ராஜா இசையை கேட்கும் போதும் ஏற்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து விரைவில் ஒரு படத்தில் பணிபுரிவேன்" என பா. ரஞ்சித் பேச உடனே "நான் தயார்" என யுவன் ஷங்கர் ராஜா பதில் அளித்தார்.
Also Read | THUNIVU: போலீஸ் கெட்டப்பில் செம்ம லுக்கில் நடிகர் பக்ஸ்.. துணிவு படத்தின் அடுத்த அதிரடி போஸ்டர்!