www.garudavega.com

"ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு எதிரானது" - நீட் விவகாரத்தில் கொந்தளித்த பா. ரஞ்சித்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Pa Ranjith about Tamilnadu Governor N R Ravi Neet Issue

விஜய் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்! வலிமை படம் போலவே BEAST படத்திலும் இது இருக்காம்!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

"மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, கடந்த ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம்  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுச்செய்து பின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pa Ranjith about Tamilnadu Governor N R Ravi Neet Issue

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித் நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நடந்து கொண்டது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான், ஜனாபதியின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்ப முடியும்.

இச்சூழலில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் தான் இருந்து வந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதா, தமிழக ஆளுநர் என்.ஆர். ரவியால் தமிழக அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Pa Ranjith about Tamilnadu Governor N R Ravi Neet Issue

இது குறித்து சில நாட்களுக்கு முன் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், நீட் தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருந்து, இந்த மசோதா எந்த வகையில் மாறப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ள காரணத்தையும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நீட் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என உறுதிப்படுத்தும் வரை, இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என கூறினார்.

இந்நிலையில் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஆளுநர் செய்த செயலை எதிர்க்கிறேன். ஆளுநருக்கு இவ்வளவு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழக மக்கள் விரும்புவதற்கு இது எதிரானது. தமிழக மக்களுக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். ஆளுநரின் செயல்பாடு தவறானது" என கூறியுள்ளார்.

அஜித் நடிக்கும் வலிமை! தமிழை விட தெலுங்கில் இன்னும் தரமான சம்பவம் இருக்கு!

 

Pa Ranjith about Tamilnadu Governor N R Ravi Neet Issue

"ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு எதிரானது" - நீட் விவகாரத்தில் கொந்தளித்த பா. ரஞ்சித் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith about Tamilnadu Governor N R Ravi Neet Issue

People looking for online information on நீட் தேர்வு, நீட் விவகாரம், பா. ரஞ்சித், Governor N R Ravi, Neet issue, Pa Ranjith, Tamilnadu Governor will find this news story useful.