www.garudavega.com

'ஓடிடி' தளங்களை இனி அரசு கேபிள் டிவியிலயே பாக்கலாமா?.. வேற லெவல் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகளவிலான கொரோனா தாக்கம் இந்தியாவிலும் பெருகியதை அடுத்து ஓராண்டுக்கும் மேல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

OTT streaming via cable Says TN cable TV President

என்னதான் அதற்கு முன்பே ஓடிடி தளங்கள் இருந்தாலும், அவற்றில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இந்த கொரோனா - லாக்டவுன் காலத்தில் தான் திரையரங்குகள் திறக்கப்பட முடியாத சூழலால் அதிக படங்கள் ஓடிடியில் வெளியாகத் தொடங்கின.

இதனால் தற்போது நெட்பிளிக்ஸ், ஜீ-5, அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார், ஆஹா, பி.எஸ்.வேல்யூ, ஜீ-ப்ளக்ஸ் என மக்களிடையே ஓடிடிகளின் அறிமுகங்கள் பெருகிவிட்டன. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டகுறிஞ்சி என்.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, “ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதேபோல், “நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: “bulb எரியுதா?.. நேர்ல வந்து பேசுங்கடா!”.. ‘வக்கிரமான கமெண்ட்ஸ்’.. கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

OTT streaming via cable Says TN cable TV President

People looking for online information on Amazon Prime Video, DisneyHotstar, Netflix will find this news story useful.