Bigg Boss: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது நிறைவடைந்தது.
Bigg Boss OTT
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 24 நான்கு மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் இறுதி நாளன்று அந்த மேடையிலேயே அந்த அரங்கத்திலேயே வைத்து கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
Bigg Boss Ultimate
அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்றும் பெயரை அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் மற்றும் கடைசி சீசனான 5வது சீசன் ஆகிய அனைத்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று கமல்ஹாசன் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சிறப்பு ஒரு மணி நேர எபிசோட்..
அதன்படி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி +ஹாட்ஸ்டார் ஓடிடியில், ஜனவரி 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஒரு மணி நேர எபிசோட் அதே நேரத்தில் விஜய் டிவியின் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கலந்துகொண்ட போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்களான வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த நிரூப் மற்றும் தாமரை இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் தாமரை மற்றும் நிரூப் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முக்கிய போட்டியாளர்கள். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பார்கள் என்று கூட பலரால் கருதப்பட்டனர். இவர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
தோற்ற இடத்தில் தனே ஜெயிக்க முடியும்?
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி பற்றி அறிவிக்கும் போது, “தொலைத்த இடத்தில் தானே தேடமுடியும்? தோற்ற இடத்தில் தனே ஜெயிக்க முடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏற்ப ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் போட்டியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் கமல்ஹாசனால் வரவேற்கப்பட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சிறப்பு பொருள்கள்
இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் போகும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் நடிகர் கமலஹாசன் கீரை, உப்பு, கடுகு, மிளகு, தேன், பசு நெய் என ஒவ்வொரு பொருளை, ஒரு குறிப்பிட்ட குறியீட்டுடனும் குறிப்புடணும் சொல்லிக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஏன் 24 மணி நேரமும்?
பிக்பாஸ் நிகழ்ச்சி எதற்காக 24 மணி நேரமும் ஓடுகிறது? என கமல்ஹாசனிடம் பிக்பாஸ் அரங்கத்தில் ரசிகர்கள் கேட்டபோது, பதில் அளித்த கமல்ஹாசன், “கட் பண்ணி தானே போடுறாங்க.. மற்ற நேரங்கள் எல்லாம் என்ன நடந்தது என காட்டினால் தானே உண்மை என்ன என தெரியும் என்று நிறைய பேர் கேட்டீர்கள். உங்கள் ஐடியாவை தான் இப்போது செயல்படுத்தியி உள்ளார்கள்!
24 மணி நேரம் பார்க்க முடியாதவர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஏன் காட்டுகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொன்ன நடிகர் கமல்ஹாசன், ஒருவேளை 24 மணி நேரமும் பார்க்க முடியாதவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுப்பாக காண வேறு வழி உள்ளது என்று அறிவித்துள்ளார். அதன்படி இந்த நிகழ்ச்சியின் 24 மணி நேர சம்பவங்களை தொகுத்த சிறப்பு 1 மணி நேர சுருக்கம் இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.