93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடக்கிறது.
இதில் சிறந்த படத்துக்கான விருதினை Nomadland படம் பெற்றது. இதேபோல், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இதே நோமேட்லாண்ட் (Nomadland)படத்துக்காக, இப்படத்தின் சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார்.
Congratulations to Chloé Zhao for winning the #Oscars for Best Director for her film #Nomadland!
Zhao is the first woman of Asian descent to win the award, and only the second woman to win this award since Kathryn Bigelow. https://t.co/g0IjhwchKv pic.twitter.com/m87jS5iwly
— Rotten Tomatoes (@RottenTomatoes) April 26, 2021
93 வருட ஆஸ்கர் வரலாற்றில் இவர் தான் சிறந்த இயக்குநருக்கான விருதினை பெறும் 2வது பெண்மணி. அதிலும் கலர் படத்தை இயக்கியதற்காக விருது பெற்ற முதல் இயக்குநர் இவர்தான். முன்னதாக 2010-ஆம் ஆண்டு ‘தி ஹர்ட் லாக்கர்’ (The Hurt Locker) படத்துக்காக கேத்ரின் பிக்லோ (Kathryn Bigelow) எனும் பெண்மணி ஆஸ்கர் விருதினைப் பெற்றிருந்தார்.
#Oscars Moment: Sergio Lopez-Rivera, Mia Neal, and Jamika Wilson win for Best Makeup and Hairstyling for Ma Rainey's Black Bottom (@MaRaineyFilm). pic.twitter.com/K2BrYmsC7a
— The Academy (@TheAcademy) April 26, 2021
இதேபோல் Ma Rainey's Black Bottom படத்துக்காக சிறந்த மேக் அப் மற்றும் ஹேட் ஸ்டைலிங் விருதினை செர்ஜியோ லோப்ஸ்-ரிவேரா (Sergio Lopez-Rivera), மியா நீல் (Mia Neal) மற்றும் ஜாமிகா வில்சன் (Jamika Wilson) பெற்றுள்ளனர். இவர்களுள் மியா நீல் மற்றும் ஜாமிகா வில்சன் ஆகியோர் இந்த கேட்டகரியில் வரலாற்றில் முதல் முறையாக இந்த விருதுகளை பெறும் கருப்பின பெண்கள் என உலக சினிமா ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.