ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலான ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற தகுதி பெற்றுள்ளது.
Also Read | "வனிதா அக்காவுக்காக Waiting, அவங்க பேசுறப்போ Counter குடுக்கணும்".. அசிம் சொன்னதும் பதறிய அமுது
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்தாக கூறப்படும் இப்படம் பின்னர் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 301 திரைப்படங்களில் ‘காந்தாரா’ திரைப்படமும் உள்ளது. திரையரங்குக்கு பின்னர் இப்படம் ஓடிடியிலும், இதனை தொடர்ந்து டெலிவிஷன் ப்ரீமியருக்கும் வந்துவிட்ட நிலையில், இப்படத்தின் இந்த சாதனை பலராலும் பாராட்டப்பெற்று வருகிறது.
இதுதொடர்பாக ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டரில், "காந்தாரா படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவிகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளது. எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுடன் இப்பயணத்தை தொடர காத்திருக்கிறோம். அந்தப் பாதையில் பளிச்சிடுவதை காண ஆவலோடு எதிர்நோக்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மிக அண்மையில் 'காந்தாரா' திரைப்படம் 100 நாட்களை எட்டியது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சார பிரம்மிப்பை ஏற்படுத்தும். அதை சாத்தியப்படுத்திய எல்லார்க்கும் நன்றி" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "வனிதா வந்தா நேரா அசிம்கிட்ட போய்".. ஜாலியா மைனா நந்தினி சொன்ன விஷயம் 😅.. ஹவுஸ்மேட்ஸ் கலகல