www.garudavega.com

ஆஸ்கார் வென்ற மம்மி ஹீரோ.. THE WHALE படத்துக்காக பருமன் ஆனது எப்படி? வியக்க வைக்கும் பின்னணி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாலிவுட் நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர், The Whale படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்கார் விருது வென்ற மேடையில், "நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு  சினிமாவில் நடிக்க தொடங்கினேன், விஷயங்கள் எனக்கு எளிதாக வரவில்லை. இந்த விருதுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்." என பேசினார்.

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

Images are subject to © copyright to their respective owners.

The Whale படத்திற்காக 270 கிலோ எடையுள்ள சார்லி என்ற கதாபாத்திரத்தில் 

தனது மகளுடனான உறவை மீட்டெடுக்க முயற்சிக்கும் ஆங்கில ஆசிரியராக ஃப்ரேசர் நடித்திருந்தார். சோகம், வலியுடன் உயிருக்கு ஆபத்தான உடல் பருமன் ஆகியவற்றுடன் வாழும் சார்லி கதாபாத்திரத்தின் ஃப்ரேசர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சார்லியாக ஃப்ரேசரின் நடிப்புக்கு Prosthetic Make Up எனும் செயற்கை ஒப்பனை  மிக முக்கிய பங்கு வகித்தது. உலக அளவில் கொண்டாடப்படும் இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி இந்த படத்தினை இயக்கும் முன் சார்லி கதாபாத்திரத்தின் உடல் எடை இயல்பான மனிதர்களின் எடையை விட மிக அதிக அளவில் நம்பமுடியாத வகையில் இருக்க வேண்டும் என்ற முடிவில் இருந்துள்ளார், மேலும் இந்த உடல் எடை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு கடுமையானதாக இருப்பதாகவும் கற்பனை செய்திருந்தார்.

மேக்கப் போட்ட பிறகு  ஃப்ரேசரின் முகம், அவரது உணர்ச்சிப்பூர்வமான முகபாவனைகளை  மறைக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய தற்போது ஆஸ்கார் விருது வென்ற மேக்கப் கலைஞர் அட்ரியன் மோரோட்டை அனுகி உள்ளார். அரோனோஃப்ஸ்கியுடன் தி ஃபவுண்டன், நோவா ஆகிய படங்களில் மொரோட் பணிபுரிந்தவர் ஆவார். 

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

Images are subject to © copyright to their respective owners.

 பிரெண்டன் ஃப்ரேசர் உடற் பருமனாக காட்ட "ஃபேட் சூட்கள்" என்ற செயற்கை உடை 40 நாட்கள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது. 4 முதல் 5 நபர்கள் சேர்ந்து தான் இந்த உடையை சுமக்க முடியும். அதே போல அகற்றவும் 4 முதல் 5 நபர்கள் தேவை. இதன் எடை கிட்டத்தட்ட 50 கிலோ ஆகும். மேலும் முக ஒப்பனைக்கு நான்கு மணிநேரம் வரை ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

Images are subject to © copyright to their respective owners.

ஒவ்வொரு நாளும். சூட் அணிந்ததும், நடந்து செல்லவே  மற்றவர்களின் உதவி ஃப்ரேசருக்கு தேவைப்பட்டது. ஃபார்முலா ஒன் ரேஸ் கார் ஓட்டுனர்களுக்குப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் அமைப்பைப் போன்றே இந்த ஃபேட் சூட்டில் உள்ளமைக்கப்பட்ட குளிர்ச்சி அமைப்பு இருந்தது, இருப்பினும் வெப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத அளவுக்கு இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பில் ஃப்ரேசர் அதை கழற்றும்போது, ​​அவருக்கு மயக்கம் கூட ஏற்பட்டதாம்.

54 வயதான பிரெண்டன் ஃப்ரேசர்,  "ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்" மற்றும் "தி மம்மி"  திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். மேலும்  "காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்," "தி க்வைட் அமெரிக்கன்" மற்றும் "க்ராஷ்" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Oscar Award Winning Brendan Fraser Fat Suit Make up The Whale

People looking for online information on Brendan Fraser, Fat Suit, Oscars, The Whale will find this news story useful.