Vijay Television, BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் நெருங்கி வருவதை அடுத்து அனைவருமே ஃபினாலே ரேஸ் என்கிற இந்த பரபரப்பான போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
ஃபினாலே ரேஸ்
இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்குகள் அனைத்துமே மிகவும் கடுமையாகிக் கொண்டே போகின்றன. இந்த வாரம் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். ராஜூ, தாமரை மற்றும் பாவனி உள்ளிட்டோர் பிக்பாஸ் அரங்கத்தில் இருந்த ஆடியன்ஸ் சிலர் மூலம் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
‘அப்படி சண்டை போட்டவங்களா.. இப்படி இருக்காங்க!’.. ரசிகர்களை நெகிழவைத்த கடைசி நேர காட்சிகள்!
Open நாமினேஷன்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஒரு Open நாமினேஷனை அறிவித்திருக்கிறார். அதன்படி போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் குறிப்பிட்ட போட்டியாளரிடம் நேரடியாக சென்று அவர்களின் மீது மாலை போட்டு அவர்களை நாமினேஷன் செய்து, எதற்காக அவர்களை நாமினேஷன் செய்கிறார்கள் என்கிற காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.
மாலை அணிவித்து நாமினேஷன்
இதன் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் நாமினேஷன் செய்ய விரும்பும் போட்டியாளர்களுக்கு மாலையை அணிவித்து அவர்களின் முகத்தை பார்த்து நேருக்கு நேராக நின்று அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி நாமினேஷன் செய்தனர்.
அந்த வகையில் அமீர் ராஜூவுக்கு மாலை போட்டு நாமினேட் செய்வதையும், சிபி நிரூப்புக்கு மாலை அணிவித்து நாமினேட் செய்வதையும் காண முடிகிறது. இதேபோல் தாமரை நாமினேட் செய்யப்பட்ட மாலையை அணிந்திருக்கிறார். அதன்பிறகு தாமரை மற்றும் பிரியங்கா இருவர் இடையேயான பேச்சுகள் தொடர்கின்றன.
நான் மட்டும் ஈஸியா போய்ட்டேனா?
முன்னதாக பேசும் பிரியங்கா, “நான் மட்டும் மிகவும் ஈஸியாக போய்விட்டேனா? பிரியங்கா தானே என்று நினைக்கிறார்கள்!” என்று தனது ஆதங்கத்தை கூறிக் கொண்டிருக்கிறார். இதேபோல் பிரியங்காவிடம் பேசும் தாமரை, “தப்பு செய்தவர்களை விட தவறு செய்ய தூண்டியவர்கள் .. கெட்டவர்கள்!” என்று குறிப்பிடுகிறார்.
கைல கிளாஸூ... Amala Paul .. புது வருசம் flight-லயே தொடங்கிடுச்சோ!.. செம trending!
தாமரை மற்றும் பிரியங்கா
தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் யாரை குறிப்பிட்டு பேசுகிறார்கள் என்பது எபிசோடில் தான் தெரியவரும். முந்தைய நாட்களில் தாமரை மற்றும் பிரியங்கா இருவருமே சைலண்ட்டாகவும், கத்தியும், ஆக்ரோஷமாகவும், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும் சண்டை போட்டார்கள் என்பதை அனைவருமே அறிவர்.
கமல் அறிவுரை
அதே சமயம், பிக்பாஸ் வீட்டுக்குள் இவர்கள் அனைவருமே டாஸ்க் என்று வந்தால் மட்டுமே சண்டை போட்டுக்கொள்வதையும் மற்ற நேரங்களில் ஒன்றாக ஒற்றுமையாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் காண முடிவதாக அண்மையில் கமல்ஹாசனே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் அவரவரும் தனித்தனியே தங்கள் விளையாட்டை விளையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.