68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
Also Read | இவர் தான் உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவர்! LYCA வெளியிட்ட PS1 பொன்னியின் செல்வன் படத்தின் BTS!
தமிழிலும் பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ் குமார்) என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை ஊர்வசி. 80களில் இருந்தே தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. அதன் பின்னர் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் மற்றும் பலரது இயக்கத்தில் வெளிவந்த, ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் கதையே நடிகை ஊர்வசி மீதுதான் பயணிக்கும். நகைச்சுவை, வெகுளி, கோபம், அழுகை என எல்லா விதமான கேரக்டர்களில் நடித்து அசத்தக்கூடியவர் ஊர்வசி. தமக்கே உரிய உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் திரையில் ஒரு நம்பமுடியாத மேஜிக்கை அசாத்தியமாக நிகழ்த்தக் கூடியவர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ தமது ட்விட்டரில் தேசிய விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தம்முடைய ஒரு பதிவில், “ஊர்வசி விருது வென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் (நடிப்பு) outstanding-ஆக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த ட்வீட்டை பகிர்ந்து வழிமொழிந்துள்ளனர்.
Also Read | ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வருட திரைப்பயணம்... விரைவில் வெற்றிக் கொண்டாட்டம்.!