அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியான திரைப்படம் புஷ்பா.
ஆந்திரப்பிரதேச கடைகளில் நடக்கும் செம்மரக்கடத்தல் திருட்டு தொடர்பாக விவரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக்கடத்தல் வியாபாரம் செய்யும் புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக அல்லு அர்ஜூனுடன் முதல்முறையாக ரஷ்மிகா மந்தனா கைகோர்த்திருக்கிறார்.
சுகுமார் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. பாடல்கள் அனைத்தும் கதை சூழலுடன் பொருந்தி வருவதுடன் அதேசமயம் கமர்ஷியலாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அதன்படி, இந்த திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ‘ஓ சொல்றியா மாமா’ என தமிழில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி இருக்கிறது. இதேபோல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகி இருக்கும் இன்னொரு மிக முக்கியமான பாடலாக ‘சாமி சாமி’ பாடல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த பாடலை பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல்கள் எந்த அளவுக்கு ஹிட் ஆகியிருக்கின்றன என்பதை இணையத்தில் இந்த பாடல்களை வைத்து வரும் பாசிட்டிவான பல மீம்ஸ்களில் இருந்து அறிய முடியும்.
அந்த வகையில் பாக்யராஜ் நடித்த, ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் பாக்யராஜ் மற்றும் ஷோபனா இருவரும் ஆடி பாடக் கூடிய ‘நா ஆளான தாமரை’ பாடலுக்கு சாமி சாமி பாடலை பொருத்தி வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி இருவரும் நடித்திருக்கும் ‘நலம்தானா’ பாடலை,, ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்குப் பொருத்தியும் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த பாடல்கள் இந்த வீடியோக்களுக்கு கட்சிதமாக பொருந்துவதாக அமர்ந்து அமைந்திருக்கின்றன. முதல் நாள் முதலே புஷ்பா திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை காண முடிந்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது, என்பதும் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.