www.garudavega.com
RRR Others USA

3 வருஷத்துக்கு முன்.. விஜய்க்கு மூதாட்டி எழுதிய உருக்கமான கடிதம்.. "ஏன் அனுப்பல..?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்க்கு அனுப்ப வேண்டி, மூதாட்டி ஒருவர் எழுதி இருந்த கடிதம், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Old lady letter to actor vijay for help gone viral

பிகினி உடை.. கடலில் குளியல்.. கடற்கன்னியாய் மாறிய 'பேச்சுலர்' திவ்யபாரதி.. லேட்டஸ்ட் வீடியோ..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த 'மாஸ்டர்' திரைப்படம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பட்டித் தொட்டி எங்கும் ஹிட்

வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பும், நேற்று (22.03.2022) வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள், பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. அது மட்டுமில்லாமல், சர்வதேச அளவிலும் இந்த பாடல்கள் வைரலாகி, பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Old lady letter to actor vijay for help gone viral

உதவி கேட்டு கடிதம்

இதனால், பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அல்லது டீசர் குறித்த அறிவிப்பினை படக்குழு அடுத்து எப்போது வெளியிடும் என்றும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு வேண்டி, மூதாட்டி ஒருவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றைக் குறித்த தகவல், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அவதிப்பட்ட மூதாட்டி

நாமக்கல் மாவட்டம், மோகனூர் என்னும் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், விஜய்யின் முகவரி என்னவென்று தெரியாத காரணத்தினால், அந்த கடிதத்தை அனுப்ப முடியாமலும் அந்த பாட்டி அவதிப்பட்டுள்ளார்.

Old lady letter to actor vijay for help gone viral

'திடீர்' வைரல்

பின்னர் அந்த கடிதத்தினை அனுப்ப முடியாமல் போனது பற்றி, வேதனையுடன் தன்னுடைய பேரனிடம் அந்த பாட்டி தெரிவித்துள்ளார். இதன் பிறகு தான், மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த பாட்டி எழுதிய கடிதம், அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மத்தியில், மிக அதிகமாக வைரலாகி வரும் இந்த கடிதம், விஜய் கவனத்தில் போகுமா என்பதைத் தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Cute ஸ்மைல் நயன்தாரா… Mass ஆக்ஷன் பிருத்விராஜ் – 'பிரேமம்' இயக்குநரின் Gold பட டீசர்!

3 வருஷத்துக்கு முன்.. விஜய்க்கு மூதாட்டி எழுதிய உருக்கமான கடிதம்.. "ஏன் அனுப்பல..?" வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Old lady letter to actor vijay for help gone viral

People looking for online information on கடிதம், மூதாட்டி, விஜய், Help, Letter, Old lady, Thalapathy Vijay, Vijay will find this news story useful.