விஜய்க்கு கொடுத்தது போல ஒரு முத்தம் - ஓ மை கடவுளே பிரபலம் போட்டோவுடன் நெகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கிய ஓ மை கடவுளே இயக்குநர் | oh my kadavule director ashwath marimuthu on vijay sethupathy kiss

ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் அஷ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன், ரித்திகா சிங், வானி போஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிடோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கிய போட்டோவை பகிர்ந்துள்ள அவர், 'அது எப்படி, தலைவன் கிட்ட நாம கிஸ் வாங்காம இருப்போமா.? என் இனிய விஜய் சேதுபதி அண்ணா, இந்த உலகத்துல எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம மத்தவங்களுக்கு நல்லது செய்யுற மனசுதான் கடவுள். அப்போ படத்துல மட்டுமில்ல, எனக்கும் நீங்க கடவுள்தான். அதனால் நீங்கள் மக்கள் செல்வன்'' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கிய ஓ மை கடவுளே இயக்குநர் | oh my kadavule director ashwath marimuthu on vijay sethupathy kiss

People looking for online information on Ashwath Marimuthu, Oh My Kadavule Tamil, Vijay Sethupathi will find this news story useful.