இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, திரிஷா நடித்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிம்பு த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயற்றி உள்ளார்.
'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இதனை பற்றிய பதிவுகளும் மீம்களும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் வீட்டிலேயே எப்படி இந்த படத்தை படமாக்கினார்கள் என்பது பலருக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்நிலையில் இந்த குறும்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்புவிடம் இதை எப்படி சாத்தியப்படுத்த போகிறோம் என்று பேசும் அந்த காணொளி மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புதிய முயற்சியை பலரின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது என்பதே உண்மை.