தேசிய விருது பெற்ற நடிகர் பிஜே மோஹன்டி காலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடியா மொழியில் எடுக்கப்படம் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அம்மொழி திரைப்படங்களில், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பிஜே மோஹன்டி. மேலும் இவர் Delhi School of Drama-விலும் நசுரிதின் ஷா, ஓம் பூரி உள்ளிட்டோருடன் நடிப்பு பயின்றுள்ளார்.
இதனிடையே அண்மைக் காலமாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டுவந்துள்ள பிஜே மோஹன்டி, நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடியா சினிமாவிற்கு பெரும் பங்களித்த பிஜே மோஹன்டியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என ஓடியா சினிமா ரசிகர்களும், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரிசா முதலமைச்சார் சார்பில் வெளியான பதிவில், ''பிஜே மோஹன்டியின் இழப்பு, ஒடியா சினிமாவில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கான மரியாதைகளை அரசு இனி வரும் காலங்களில் செய்யும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM @Naveen_Odisha has expressed deep grief over the passing away of renowned film actor & director #BijayMohanty. CM said, his death marks the end of an era and has created a deep void in Odia film industry. CM announced that the veteran actor will be cremated with state honours.
— CMO Odisha (@CMO_Odisha) July 20, 2020