கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடித்துள்ள O2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, கடைசியாக 'அண்ணாத்த', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இது போக, நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள 'அறம்', 'கோலமாவு கோகிலா' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
பேருந்தில் சிக்கும் பயணிகள்
அந்த வகையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள 'O2' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார். மேலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில், 'O2' திரைப்படம், வெளியாகவுள்ளது. ஒரு தாய் தன்னுடைய 8 வயது மகனுடன் பேருந்து ஒன்றில் விபத்தில் சிக்குகிறார். காற்று போக முடியாத பாதாளம் ஒன்றில், பேருந்திலுள்ள பயணிகள் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் குறித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளது.
டீசர் குறித்த கருத்து
'O2' டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, இந்த டீசரை பார்க்கும் பலரும் சில வேறு மொழிகளில் வரும் படங்களின் ரீமேக்காக இருக்கும் என குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல, மற்ற சில மொழி படங்களின் தழுவலைக் கொண்டு உருவாகி இருக்கலாம் என்றும் டீசரை வைத்தே தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் போட்ட ட்வீட்
இப்படியான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், 'O2' படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "நம்ம ஊர்ல ஏன் வித்தியாசமா யோசிக்கிறதில்லனு ஆதங்கப்படறாங்கனு, நம்ம ஒரு கதைய தேடி எடுத்துட்டு வந்தா, பல பயலுவ இது எந்த கதையோட ரீமேக்குன்னு கேக்குறாங்க!! உங்க டிசைனே புதுசா இருக்கே!!" என குறிப்பிட்டு, இயக்குனர் GS விக்னேஷின் ஒரிஜினல் கதை தான் என்றும் தெரிவித்துள்ளார்.
டீசர் ரிலீஸ் ஆனதும், பல படங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில்,உடனடியாக அப்படி எதுவுமில்லை என அசத்தலாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார் O2 படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8