சென்னை: பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் மற்றும் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரவேசம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
THALAPATHY66 : தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் புதிய படம்! ஷூட்டிங் எப்போ? எந்த GENRE தெரியுமா?
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துவிட்ட நிலையில் தற்போது நகராட்சி , பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள இருப்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கம் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர். அதில் 129 பேர் வெற்றிப் பெற்றதாக மக்கள் இயக்கத்தினர் மூலம் கூறப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி வழங்கி உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் Ex MLA தெரிவித்து இருந்தார்.
மேலும் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜயின் உத்தரவின் படி 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைகளும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, 'தளபதி' மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை , மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், விஜய உங்களுக்கு போட்டியா? விஜய் ரசிகர்கள் தேர்தலில் நிற்பது குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கும் சீமான் பதில் அளித்தார்.
சீமான் அளித்த பதிலில் "விஜய் என்னுடைய தம்பி, கோட்பாட்டு அளவில் விஜய்யை விட நான் பல ஆயிரம் கிமீ அங்குட்டு உள்ளேன். பிரபாகரன் என் தலைவர்னு நான் பேசுவேன். விஜய் பேசுவாரா? நான் தாய் மொழி தமிழ்னு பேசுவேன், தமிழ் ஆட்சிமொழினு பேசுவேன்! விஜய் பேசுவாரா? என்னுடைய தத்துவமே வேற. மலை உடைப்பு , ஆற்று மணல் கொள்ளையை விஜய் என்னைக்காவது கண்டிச்சுருக்காரா? விஜய்யோட கோட்பாடே என்னனு தெரியாம போட்டி போட்டினு பேசக்கூடாது" என கூறியுள்ளார்.
பிரபல நடிகரும் விளையாட்டு வீரருமான பீம்பாய் பாய் பிரவீன் குமார் காலமானார்