நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடனம் ஆடிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செந்தமிழன் சீமான் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து மாதவன் நடிப்பில் ‘தம்பி’, 'வாழ்த்துகள்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
நடிகராக ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகிழ்ச்சி’, 'எவனோ ஒருவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் ‘நாம் தமிழர் கட்சி’ என்கிற தேர்தல் அரசியல் இயக்கத்தை தொடங்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இயங்கி வரும் சீமான், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாக்கியராசன், உமாயுன், நடிகர் தமிழ் குமரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ் ஓசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா!
தற்போது நேரலையில்..!
சென்னை, கலைவாணர் அரங்கம்
மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்! https://t.co/4d50K54dL5
— சீமான் (@SeemanOfficial) September 17, 2022
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் வசந்தன் குழு இசை இசைக்கும் பொழுது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் எழுந்து நின்று நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த காணொளியை சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.