தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என கடந்த மே.28ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து திரையரங்குகளிலும் இனி 24 மணிநேரம் இயங்குவதற்கான ஆணையையும் தமிழக அரசு செளியிட்டுள்ளது.
வார இறுதிநாட்களில் பெரிய, சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் வசூலில் பாதிப்புகள் இருந்து வரும் நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது மல்டிபிளக்ஸ், மால், சிறிய திரையரங்குகள் என அனைத்திற்கும் இந்த அரசணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை காட்சிகள் இருக்கும் என்பன குறித்த விவரங்களை திரையரங்க உரிமையாளர்கள் சட்டவிதிப்படி அவர்கள் காட்சிகளை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில், ‘தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகளை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை திரையரங்குகளுக்கு பொருந்தாது. தமிழ்நாடு சினிமா கட்டுப்பாடு சட்டம் 1956ன் கீழ் இயங்குவதால், 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட முடியும்’ என தெரிவித்துள்ளார்.