நடிகை , இசைக்கலைஞர் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு திரைப்படத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறைவு செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டுகளில் திரைத்துறை கண்ட மிகப்பெரிய வெற்றிகளில் சிலவற்றில் தமது பங்களிப்பையும் ஸ்ருதி வழங்கியுள்ளார்.
பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக சலார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக Chiru 154 மற்றும் பாலகிருஷ்ணாவுடன் NPK 107 ஆகியவை அவரது ஸ்ருதி கைவசம் இருக்கும் படங்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்த நடிகை ஸ்ருதிஹாசன், திரைத்துறையில் ஆணாதிக்கம் நிகழ்வது பற்றி வெளிப்படையாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் ஸ்ருதி தனக்கே உரிய பாணியில் கருத்து தெரிவித்தார்.
மேலும் ஸ்ருதிஹாசன் கூறுகையில், “சினிமா மற்றும் ஒவ்வொரு வகையான கலையும் சமூகம் மற்றும் நாம் வாழும் காலத்தின் பிரதிபலிப்பு மட்டுமே” என்று கூறியதுடன், அவர் மேற்கோள் காட்டுகையில், “நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம் என்று நான் நினைக்கிறேன். சினிமாவை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை.
சினிமா என்பது நாம் பார்க்கும் கதைகளின் பிரதிபலிப்பாகும். சில சமயங்களில் அது கோழி மற்றும் முட்டையின் சூழ்நிலையாக மாறும், ஆனால் பெரும்பாலும் ஒரு கலை, வாழ்க்கையைப் பின்பற்றுகிறது என்று நான் கூறுவேன்” என்றார்.