www.garudavega.com

“அம்மாவ பார்த்துக்கங்க”.. குடும்பம், குழந்தைகள் பற்றி சன்னி லியோன் அட்வைஸ்..! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

not easy to take care 3 children Sunny Leone Exclusive

Also Read | விஜய் சேதுபதியுடன் ‘காந்தி டாக்ஸ்’ .. BTS ஃபோட்டோ பகிர்ந்து நடிகர் சொன்ன கமெண்ட்.!

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

not easy to take care 3 children Sunny Leone Exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இதில், “அழகுத்துறையில் ஒரு நடிகை என்பதை தாண்டி, ஒரு அழகான தாய் என்பது எளிமையான வேலை அல்ல. உங்கள் குழந்தைகளை எப்படி கவனிக்கிறீர்கள்?” என நடிகை சன்னி லியோனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

not easy to take care 3 children Sunny Leone Exclusive

இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “அவ்வளவு எளிதல்ல தான். ஆனால்.. மூன்று குழந்தைகளை கவனிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல தான். ஆனால் நிறைய மனிதர்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். பலர் கூட்டுக் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் அதிக நபர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். அதை நாம் எப்படியேனும் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. நாம் தான் நம் குடும்பத்தினர், சகோதர சகோதரிகள், மாமா அத்தை, பெற்றோர் ... என நாம் அனைவரையும் பார்க்க வேண்டும்.. டேனியல் அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கொள்வார். அவருக்கு எல்லாமே குடும்பம்தான். நீங்களும் அம்மாவை பார்த்துக்கணும்” என சன்னி லியோன் அட்வைஸ் செய்து குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அட.. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரா இவங்க? வைரலாகும் சிறுவயது ஃபோட்டோ..!

“அம்மாவ பார்த்துக்கங்க”.. குடும்பம், குழந்தைகள் பற்றி சன்னி லியோன் அட்வைஸ்..! EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Not easy to take care 3 children Sunny Leone Exclusive

People looking for online information on Sunny Leone will find this news story useful.