விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 20 நாட்களே கிட்டத்தட்ட இருக்கும் நிலையில், போட்டியாளர்கள் அனைவருமே கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை நோக்கி தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.
நாமினேஷன் ப்ராசஸ்
இதனிடையே கடுமையான டாஸ்குகளால் ஹவுஸ்மேட்ஸ் பேசிக்கொள்வதும், வாக்குவாதம் செய்துகொள்வதும், சண்டை போட்டுக்கொள்வதும், அதிகரித்ததை இந்த வாரங்களில் காண முடிந்தது. இந்த டாஸ்குகள் தொடங்கும் முன் அனைவரும் சக போட்டியாளர்களை காரணங்களுடன் நாமினேட் செய்தனர்.
டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே
ஆனால் அனைவரும் நாமினேட் செய்து முடித்த பின்பு, அனைவரையும் நாமினேட் செய்வதாக பிக்பாஸ் அறிவித்து அதிரவைத்தார். இதன் பிறகு அடுத்தடுத்து 2 கட்டங்களாக டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே டாஸ்கிற்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த டிக்கெட்டை பெறும் போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்லும் வரை நாமினேஷனில் இருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
முட்டை உடைக்கும்/காப்பாற்றிக் கொள்ளும் டாஸ்க்
இதனையொட்டி நடந்த முட்டை உடைக்கும் டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரின் ஆக்ரோஷமான மோதல் மெல்லத் துளிர்விட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சென்றது.
முதலாவதாக பிரியங்கா தாமரையை கேமிற்காக தள்ளுவதாக கூறி தள்ளிவிட, தாமரை மீண்டும் ஆக்ரோஷமாக பிரியங்காவை தள்ளிவிட்டார். இதனால் தாமரை தன்னை எப்படி Hit பண்ணலாம்? என்று பிரியங்கா கோபமானார். பின்னர் பேசிய தாமரை தன்னை பிரியங்கா கடுப்பேத்துமாறு பேசியதுதான் அவரை தள்ளிவிட்டதற்கு காரணம் என்று விளக்கம் அளித்தார்.
பிரியங்காவை எதிர்க்க பயப்படுகிறார்கள்
இந்நிலையில் இந்த சம்பவங்களில் பிரியங்கா குறித்தும் ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிரூப் மற்றும் தாமரை பேசிக்கொண்டனர். இதில் தாமரையிடம் நிரூப் பேசும்போது “சில போட்டியாளர்கள் பிரியங்காவை எதிர்க்க பயப்படுகிறார்கள். பிரியங்காவுக்கு வெளியில் ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அவளை பகைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இங்கு யாருக்குமே தைரியம் கிடையாது. நீ இங்கு வந்த பின், உனக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கும். அவர்கள் பிளான் பண்ணிதான் பண்ணுகிறார்கள்!” என்று நிரூப் கூறினார்.
நீ போனால் ஆதரவில்லாத அனாதை நான்
இதில் நிரூப்பிடம் தாமரை பேசும்போது, “அவ பேசுறது மட்டும் நியாயம் என நினைத்து பிரியங்கா பேசுகிறாள், விளையாட்டு தனமாக இருந்துவிட்டேன், ஆனால் அவள் விஷமமாக இருக்கிறாள்.
வருண் மற்றும் அக்ஷரா எனக்கு பெரிதும் ஆதரவாக இருந்தார்கள். நீ போனால் நான் ஆதரவில்லாமல், அனாதை மாதிரிதான் இந்த வீட்டில் இருந்துவிடுவேனோ என பயமாக இருக்கிறது!” என்று கூறினார்.2