www.garudavega.com

"ப்ளீஸ்.. இத செய்யாதீங்க"... எமோஷனலாகி கதறி அழுத ஜனனி..! பரபரப்பில் இன்றைய பிக்பாஸ்.. BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

No arguments Please janany cried in bigg boss 6 tamil

Also Read | கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’.. விஷ்ணு விஷாலுக்கு வெச்சிருந்த டைட்டிலா? - பிரபல இயக்குநர்.!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No arguments Please janany cried in bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களுக்கான குறிப்பு அடங்கிய அட்டயை பிக்பாஸ் வீட்டுக்குள் கன்வேயர் வழியாக அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

No arguments Please janany cried in bigg boss 6 tamil

இதன்தொடர்ச்சியாக சிறப்பாக பங்கெடுத்துக் கொள்ளாத ஒரு நபரை பிக் பாஸ் வீட்டில் இருந்து தேர்ந்தெடுத்து சொல்லச் சொல்லி பிக் பாஸ் கூறுகிறார். அப்போது விக்ரமன் ஜனனியை, தான் குறிப்பிட விரும்புவதாக சொல்கிறார். அதற்கு ஜனனி காரணத்துடன் சொல்ல வேண்டும் என்று விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனிடையே அமுதவாணன் எழுந்து விக்ரமிடம் ஏதோ பேச வர, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டால் வாக்குவாதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த ஜனனி, “இல்லை கண்டிப்பாக வாக்குவாதம் செய்ய வேண்டாம்.. சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. சண்டை வேண்டாம்” என்று சொல்லி எமோஷனலாகி கத்தி கதறி அழ தொடங்குகிறார். அவரை ஆயிஷா, மகேஸ்வரி என அனைவரும் தேற்றுகின்றனர்.

No arguments Please janany cried in bigg boss 6 tamil

பிக் பாஸ் வீடு என்றாலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் பலம் மற்றும் மூளை பலத்தை நிரூபிக்க வேண்டிய டாஸ்க் நிறைந்தது தான். இதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தும் பார்வையும் இருப்பதால் பல இடங்களில் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதற்கு வாய்ப்பு இருகிறது. தவிர, டாஸ்குகளின்போது ஒருவர் செய்ததை இன்னொருவர் தவறாக புரிந்து கொள்வதும் சிலர் வேண்டுமென்றே இன்னொருவரிடம் ஆவேசமாக பேசுவதும் நடந்து கொள்வதும் என்பது பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.‌

No arguments Please janany cried in bigg boss 6 tamil

முன்னதாக அமுதவாணன் மற்றும் விக்ரமன் இருவருக்கும் இடையே நீண்ட பெரும் வாக்குவாதம் சென்றது,. இதில் அமுதவாணன் விக்ரமன் செய்த செய்ல் ஒன்றை குறிப்பிட்டு, அதை விக்ரமன் ஒப்புக்கொள்ளாததால், அவர் பொய்கூறுவதாக குற்றம் சாட்ட அதுகுறித்து விக்ரமன் பதிலுக்கு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அமுதவாணன் உங்கள் அளவுக்கு என்னால் பேச, எதுவாக இருந்தாலும் குறும்படம் போடட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிவிட்டு சென்றுவிட்டார்.

No arguments Please janany cried in bigg boss 6 tamil

இதேபோல் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சென்றது. அதில் விக்ரமனிடம் அசீம், “நீங்கள் எனக்கும் ஜனனிக்கும் பஞ்சாயத்து பண்ணாதீர்கள்!” என்று கூற, “பஞ்சாயத்து நான் பண்ணவில்லை” என்று விக்ரமன் கொதித்தார்.  பதிலுக்கு அசீமும், “என் வார்த்தைகளை பிடுங்கி சண்டை போட நான் ஆளில்லை” என்று பேசினார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து பார்த்த ஜனனி, தற்போது சண்டை வருவதற்கு முன்பே, சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் என்று அழத் தொடங்கி இருப்பது பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் இடையே பெருத்த கவனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | 23 வருசத்துக்கு பின் ராமராஜன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா..! கடைசியா இணைந்த படம் இதுதான்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

No arguments Please janany cried in bigg boss 6 tamil

People looking for online information on Ayesha, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany, Vikraman will find this news story useful.