சமீபத்தில் நடந்து முடிந்த பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்ஸ் விருது நிகழ்ச்சியில் தென் இந்திய திரையுலக உச்ச நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் தேவர்கொண்டா, நிவின் பாலி, யாஷ், ராம் சரண்; நடிகைகள் சாய் பல்லவி, அமலா பால், ராஷ்மிகா மந்தனா; பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பங்கேற்ற நிவின் பாலிக்கு, ’மூத்தோன்’ படத்துக்காக Best Actor in the lead role - Malayalam விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியும் விஜய ராஜா குழுமத்தின் இயக்குனர் டாக்டர். கீர்த்தனா அஷ்வினும் இவ்விருதை நிவின் பாலிக்கு வழங்கினர்.
விருந்து பெற்ற நிவின் நயந்தாராவுடன் தான் இணைந்து நடித்த ’லவ் ஆக்ஷன் டிராமா’ திரைப்படத்தில் வரும் ’குடுக்கு’ பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். உடன் பிக் பாஸ் சாண்டியும் சேர்ந்து குத்தாட்டம் போட ஆட்டம் களைக்கட்டியது.