தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர்தான் தாடி பாலாஜி. சினிமா துறையில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்தவர்.
அட.. அஜித் பட நாயகி.. பிரபல டிவி சீரியலில் பரபரப்பு எண்ட்ரி.. மாஸ் ப்ரோமோ
இவரது மனைவி நித்யா தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து பின்னர் இவரும் சினிமா துறையில் இறங்கியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால் பிரிவதற்கு முடிவு செய்துள்ளனர்.
பின்னர், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து ஆன நிலையில், இருவரும் இணைந்து பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளனர்.
இருவரும் சேர்வது போல் தெரிந்தாலும் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தற்போது தனித்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி அவரது மகளை பிரிந்து இருப்பதை குறித்து பேசி உள்ள நிலையில் பாலாஜியின் மனைவி நித்யா தன்னை குறித்து தவறாக பேசினாள் அது வெளியிடுவேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நபர் மறுபடியும் மறுபடியும் ஒருவரைப் பற்றி பேசினால் அதற்கு மீண்டும் ஊடகங்கள் வாயிலாக எனது தரப்பு கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும்,
மேலும் 2017 இல் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் பொது ஊடகங்களில் என்னை தவறாக சித்தரித்தால் நான் அமைதி காக்க வேண்டுமா எனக் கூறியுள்ள அவர்,
தற்போது தான் அமைதியான வாழ்வை வாழ்வதாகவும் நித்யா தனது வீடியோவில் கூறியுள்ளார்.
விவாகரத்து பெற்ற பின் மீண்டும் என்னை பற்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தவறாக சித்தரிக்க என்ன காரணம் என்றும், நான் எப்போதும் தாடி பாலாஜியையும், எனது மகளையும் பேசவிடாமல் தடுத்தது இல்லை என தெரிவித்துள்ளார்.
பாலாஜி என்னை பற்றி தவறாக ஊடகங்களில் குறிப்பிட்டாலும் நான் எந்த இடத்திலும் அவரைப் பற்றியும், அவரது வேலைகளைப் பற்றியும், தவறாக சித்தரித்து இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மகள் கடந்த ஐந்து வருடங்களில் நான் மூன்று நாட்கள் மட்டுமே என் அப்பாவோடு நேரம் செலவிட்டதாகவும் பிறகு அவர் அழைத்து செல்லவில்லை எனவும் வீடியோவில் பாலாஜி மற்றும் வித்யா அவர்களின் மகள் தெரிவித்துள்ளார்.
வனிதா வெளியே போயிட்டாரா? .. ப்ரோமோவுல காணும்?.. என்ன ஆச்சு? biggbossultimate