பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், பலூன் டாஸ்க், காயின் டாஸ்க், பால் பண்ணை டாஸ்க் என அடுத்தடுத்த டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது போட்டியாளர்களின் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்ட பொம்மைகளுடன், எந்த போட்டியாளர் கூடாரத்துக்குள் கடைசியாக ஓடி வருகிறாரோ, அவருடைய கையில் இருக்கும் பொம்மையில் எந்த போட்டியாளரின் பெயர் எழுதி ஒட்டப்பட்டிருக்கிறதோ, அவர் இந்த லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இப்படி ஒரு போட்டியாளர், குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துச் சென்று ஓடும்போது, யார் வேண்டுமானாலும் தடுக்கலாம் அல்லது கூடாரத்துக்குள் தள்ளிவிடலாம் என்கிற எழுதப்படாத விதியை நிரூப் கையாண்டார்.
அதன்படி, அக்ஷராவை நிரூப் இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், அக்ஷரா கூடாரத்துக்குள் போக முடியாமல், தன் கையில் இருந்த பொம்மைக்குரிய போட்டியாளரை காப்பாற்ற முடியாமல் தவித்தார். இதேபோல், அக்ஷரா ஒவ்வொரு முறையும் 2 பொம்மைகளை எடுத்துவந்ததற்காக விதிமீறல் என அறிவிக்கப்பட்டு, பிக்பாஸால் வெளியேற்றப்பட்டார்.
இதில் அக்ஷராவிடம் நிரூப் காட்டிய கெடுபடிக்கு பதிலடி கொடுக்க நினைத்த வருண், நிரூபின் பெயர் இருக்கும் பொம்மையை எடுத்துக்கொண்டு கடைசியாக கூடாரத்துக்குள் செல்லலாம் என முயற்சித்தார். அவ்வாறு செய்தால் நிரூப் இந்த லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார். அத்துடன் அக்ஷராவை, தன் உடல் வலிமையால் ஒடுக்கிய நிரூப்புக்கு ஒரு பதிலடி கொடுக்கலாம் என்பது வருணின் எண்ணம்.
ஆனால் நிரூப்போ, வருணிடம், “நீ ஒரு பொம்பளை கையில் 2 பொம்மைகளை கொடுத்துவிடும்போது என்ன செய்வது? அதனால் தான் அவளை அப்படி பிடித்து நகரவிடாமல் தடுத்து நிறுத்திக்கொண்டேன்.. ” என்று விளக்கம் சொன்னாலும் இருவருக்குமான வாக்குவாதம் முற்றி வாடா.. போடா என்றாகி, கடைசியால் இருவரையும் இருதரப்பினர் வந்து விலக்கிவிடும் அளவுக்கு இருவருக்குள்ளும் கெட்ட வார்த்தைகளால், தொண்டை கிழிய வார்த்தைப் போர் உண்டானது.