MKS Others
www.garudavega.com

எவிக்‌ஷனில் சஞ்சீவை கோர்த்துவிட்ட நிரூப்! இருவருக்கும் நடந்த பலப்பரீட்சை.. தலைகீழான ஆட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்து விலக்கு பெற நிரூப் மற்றும் சஞ்சீவ் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர்.

nioop sanjeev Collision over evction nomination biggbosstamil5

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் சுத்தி சுத்தி வந்தீக எனும் இசை நாற்காலி டாஸ்க்கில் அமீர் மற்றும் அக்‌ஷரா இறுதிப் போட்டியில் போட்டியிட, கடைசியாக அமீர் வென்றார். ஆனாலும் பாவனி, தன் நாணயத்தின் பவரை பயன்படுத்தி கேப்டன் ஆனார்.

nioop sanjeev Collision over evction nomination biggbosstamil5

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்டில் நிரூப், அண்ணாச்சி, அக்‌ஷரா, சிபி மற்றும் அபினய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பெயர்களை முன்மொழிந்த பிக்பாஸ் இறுதியில் நிரூப்பிடம், “உங்களது காயினை பயன்படுத்துகிறீர்களா?” என்று கேட்டதுடன், அவ்வாறெனில் “உங்களுக்கு பதிலாக எவிக்‌ஷன் லிஸ்டில் தேர்வு செய்யப்படாத வேறொருவரை நாமினேட் செய்யுங்கள்” என்று சொல்கிறார்.

nioop sanjeev Collision over evction nomination biggbosstamil5

அப்போது நிரூப் சஞ்சீவை நாமினேட் செய்கிறார். ஆனால் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் பாதிக்கு மேல் தான் வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்தார். இதனைத் தொடர்ந்து சஞ்சீவுடன் ஒரு பலப்ப்ரீட்சை நடத்தி, அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என பிக்பாஸ் கூறிவிட்டார்.

nioop sanjeev Collision over evction nomination biggbosstamil5

இதனை அடுத்து ஒருவரும் சிறிது தூர இடைவெளியில் நின்றுகொண்டு ஒரு பந்தால், அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளை 3 முறை ஸ்ட்ரைக் செய்ய வேண்டும். அப்படி 3 முறையும் அடிக்க இருவருக்கும் வாய்ப்பு தரப்படும். இதில் சஞ்சீவ் வெற்றிபெற்றதை அடுத்து, இந்த வார எவிக்‌ஷன் லிஸ்டில் நிரூப் தொடர்ந்து நீடிப்பதாக பிக்பாஸ் இறுதியாகவும் உறுதியாகவும் அறிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nioop sanjeev Collision over evction nomination biggbosstamil5

People looking for online information on சஞ்சீவ், நிரூப், பிக்பாஸ், BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Sanjeev, Sanjeev vs niroop, Trending will find this news story useful.