ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | விஷால் நடிக்கும் "லத்தி'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்.. ரிலீஸ் எப்போ?
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது. 'ஜிகர்தண்டா' மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா - 2 படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன், நடிகர் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை நிமிஷா சஜயன் தனது முதல் படமான தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் படத்தின் மூலம் பிரபலமானவர்.
பின்னர் நிமிஷா தி கிரேட் இந்தியன் கிச்சன், நயத், சோழா, மாலிக், ஆகிய படங்களில் நடித்தார். ஊரு பிரஷிதா பையன், ஈடா போன்ற படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. Footprints on Water என்ற ஆங்கில படத்திலும் நிமிஷா நடித்துள்ளார்.
கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் சோழா ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருதையும் நிமிஷா பெற்றார்.
நிமிஷாவின் அடுத்த படம் லிஜின் ஜோஸ் இயக்கும் சேரா. சேராவில் ரோஷன் மேத்யூ கதாநாயகனாக நடிக்கிறார். நிமிஷா & நிவின் பாலி நடிப்பில் ராஜிவ் ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள துறைமுகம் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
Also Read | BREAKING: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா - 2.. படத்தின் தாறுமாறான அப்டேட்!