www.garudavega.com

கணவர் ஆதிக்கு செல்லப் பெயர் வைத்து வாழ்த்திய நிக்கி கல்ராணி 😍.. காதலர் தின ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நிக்கி கல்ராணி காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Nikki Galrani Valentines Day wishes to her husband aadhi

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நீதான் என் உலகம், சூரியன் எல்லாம்".. காதலர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு!

நடிகர் ஆதி பினிசெட்டி, தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த 'வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Nikki Galrani Valentines Day wishes to her husband aadhi

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடை பெற்றது.  முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

Nikki Galrani Valentines Day wishes to her husband aadhi

Images are subject to © copyright to their respective owners.

நிக்கி கல்ராணி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, தனது 31-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.  அப்போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

Nikki Galrani Valentines Day wishes to her husband aadhi

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி நிக்கி கல்ராணி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை கொலாஜ் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் கணவருடன் சேர்ந்து நிக்கி கல்ராணி தோன்றியுள்ளார். அந்த பதிவில், "இன்னும் கொஞ்சம், பல லட்சம் முறை உன்னை காதலிக்க வேண்டும். இனிய காதலர் தின வாழ்த்துகள் நானு" என நிக்கி கல்ராணி ஆதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். நானு என்ற செல்லப் பெயர் வைத்து ஆதியை நிக்கி கல்ராணி வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி!

கணவர் ஆதிக்கு செல்லப் பெயர் வைத்து வாழ்த்திய நிக்கி கல்ராணி 😍.. காதலர் தின ஸ்பெஷல்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nikki Galrani Valentines Day wishes to her husband aadhi

People looking for online information on Aadhi, Nikki Galrani, Nikki Galrani Valentines Day will find this news story useful.