”ஒவ்வொரு துளி அன்பையும்….” நன்றி தெரிவித்து நிக்கி கல்ராணி பகிர்ந்த வைரல் PICS & TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

Nikki galrani thanked fans for the marriage wishes

Also Read | “ஒரு சர்ப்ரைஸ் நடிகர்”… ராம் & நிவின் பாலி படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Tweet

ஆதி- நிக்கி கல்ராணி…

பிரபல நடிகரான ஆதி, தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. ஆதியைப் பொலவே 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Nikki galrani thanked fans for the marriage wishes

காதலும் நிச்சயதார்த்தமும்…

இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிக்ளிலும் சேர்ந்து நடித்து வந்தனர். இதற்கிடையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதை இருவருமே ஒத்துக்கொள்ளாமலும் மறுக்காமலும் மௌனமான இருந்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் காதல் குறித்த தகவல்களை உண்மையாக்கும் வகையில், சமீபத்தில் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இதை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர், தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர வைரலாகின. கடந்த மார்ச் மாதம்  24 ஆம் தேதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாக இருவரும் குறிப்பிட்டுள்ள நிலையில், இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Nikki galrani thanked fans for the marriage wishes

திருமணம்…

இதையடுத்து மே 19 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலரும் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதையடுத்து இருவருக்கும் திருமண வரவேற்பு நடந்தது. அதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Nikki galrani thanked fans for the marriage wishes

நன்றி…

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு முதல்முறையாக நிக்கி கல்ராணி ஆதியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் திருமணத்துக்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் “ உங்கள் அன்பும் நேர்மறையான எண்ணங்களை நாங்கள் ஆசிர்வாதங்களாக எடுத்துக் கொள்கிறோம். எங்கள் இந்த பயணத்தில் இணைந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Also Read | அடுத்தடுத்து 3 படங்கள் … நடிகர் கார்த்தியின் ரிலீஸ் line up! பிறந்த நாளில் ரசிகர்கள் குதூகலம்!

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nikki galrani thanked fans for the marriage wishes

People looking for online information on Aadhi, Nikki Galrani, Nikki galrani Marriage wishes will find this news story useful.