ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நிதி அகர்வால் இணைகிறார்.

Niddhi Agerwal to pair in Jayam Ravi's 25th film Directed by lakshman

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கோமாளி. இந்தப் படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. விரைவில் ரிலீசாக தயாரக இருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 விதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கேரக்டர் குறித்த படம் மற்றும் தகவல்களை தினந்தோறும் வெளியிட்டு, படத்துக்கான புரமோஷன் வேலைகளில் படக் குழுவினர் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்தபடம் அவரது 25வது படம். அந்தப் படத்தை லட்சுமணன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் உருவான போகன், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களை இயக்கிவர்.

அவர் இயக்கும் அந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் பிரபல நடிகை நிதி அகர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை மகன் கெவினுடன் இணைந்து ஸ்டண்ட் சிவா அமைக்கிறார். இருவரும் இணைந்து ஏற்கனவே அடங்க மறு படத்தில் பணியாற்றியதைத் தொடர்ந்து, இருவரையும் இணைந்து பணியாற்றச் சொல்லி, புது வாய்ப்புகள் இருவருக்கும் வருகிறது. ஜெயம் ரவியின் 25வது படம் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

Niddhi Agerwal to pair in Jayam Ravi's 25th film Directed by lakshman

People looking for online information on Home Movie Makers, Jayam RaviNidhhi Agerwal, JR25, Lakshman will find this news story useful.