ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அறிவிக்கப்பட்டதும் அந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற விவாதங்கள் எழுவது வழக்கம். சில தகவல்கள் வெளியே கசிந்தாலும் முழுமையான விவரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரியவரும்.
இந்த வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவுகிறதாம். நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி முதல் துவங்கப்படவிருப்பதாக கூறப்படும் நிலையில், போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி வருகிறார்களாம்.
இந்நிலையில் இரண்டு போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாம். இதனால் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அவர்களுக்கு பதிலாக வேறு போட்டியாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் இருக்கிறார்களாம்.
இந்த போட்டியில் ஷிவானி, ரம்யா பாண்டியன், விஜே தர்ஷன், ரியோ, அனுமோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. மேலும் நாசரின் மகன் அபி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் தற்போது போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.
கடந்த முறை தண்ணீர் பிரச்சனைகள் காரணமாக நீச்சல் குளம் காலியாக இருந்தது. மேலும் கேஸ் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இந்த முறை கூடவே கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருக்கும். மேலும் நிகழ்ச்சிக்கு சட்ட ரீதியாக சிக்கல் எழுந்தால் அதனை தீர்க்க குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.