பொன்னியின் செல்வன் படத்தின் த்ரிஷா கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
Also Read | குழந்தைகளுடன் பிரிட்டனில் வலம் வரும் நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் சூப்பர் போட்டோ!
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இந்த PS1 படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நேற்று முன்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியானது. அதற்கு முன் விக்ரம் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. நேற்று நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் இன்று நடிகை த்ரிஷாவின் 'குந்தவை' கதாபாத்திரத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'ஆண்களின் உலகத்தில் தைரியமான பெண்' என்ற சொற்றொடருடன் படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
"செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை தேவி. அழகில் ரதியையும், அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள். சுந்தர சோழ சக்கரவர்த்தி முதல் சோழ நாட்டின் சாதாரண குடிமக்கள் வரையில் அவளைப் போற்றினார்கள். அரண்மனையில் அவள் காலால் இட்டதைத் தலையினால் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். சிற்றரசர்கள் தங்கள் குலத்தில் வந்த அரசிளங் குமரிகளுக்குக் குந்தவை தேவியின் பணிப்பெண்ணாக இருக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பாரத நாட்டில் அந்நாளில் பேரரசர்களாக விளங்கிய பலரின் பட்டத்துக்குரிய அரச குமாரர்கள் இளைய பிராட்டி குந்தவையின் கைப்பிடிக்கும் பாக்கியத்துக்குத் தவம் கிடந்தார்கள்" என அமரர் கல்கி பொன்னியின் செல்வன் புதினத்தில் குந்தவை நாச்சியார் குறித்து எழுதியுள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
Also Read | மாநிலங்களவை எம்.பி ஆகிறார் இசைஞானி இளையராஜா.. பிரதமர் மோடி அறிவிப்பு..!