www.garudavega.com

OTT யில் வெளியாகும் ஹரிஷ் கல்யான், பிரியா பவானிசங்கர் நடிக்கும் புதிய படம்! எந்த தேதில ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மண பெண்ணே திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

New movie starring Harish Kalyan and Priya Bhavanishankar

இந்த ஓ மண பெண்ணே திரைப்படத்தை ஏ எல் விஜய்யிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்தப்படத்தின் உரிமையை டிஸ்னி+ ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

New movie starring Harish Kalyan and Priya Bhavanishankar

இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசிய விருது பெற்ற பெல்லி சூப்புலு திரைப்படம் தான்.

New movie starring Harish Kalyan and Priya Bhavanishankar

இந்த பெல்லி சூப்புலு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ஓ‌ மண பெண்ணே. வெறும் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது திரைப்படம் முப்பது கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தெலுங்கு சினிமாவின் திசைவழி போக்கை மாற்றிய மிக முக்கிய திரைப்படமாக இன்றும் இந்த திரைப்படம் அடையாளம் காணப்படுகிறது.

New movie starring Harish Kalyan and Priya Bhavanishankar

இந்நிலையில் ஓ மணப்பெண்ணே திரைபடம் இந்த ஆக்டோபர் மாதம் 22 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதனை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

New movie starring Harish Kalyan and Priya Bhavanishankar

People looking for online information on Harish Kalyan, Priya Bhavanishankar will find this news story useful.