சென்னை, 5 மார்ச், 2022: வேகமாக வளர்ந்து, தமிழ்நாட்டின் முக்கியச் சேனல்களுள் ஒன்றாக தன்னை நிலைநாட்டியிருக்கும் கலர்ஸ் தமிழ், “இது சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் அதன் புத்தம் புதிய புதின நெடுந்தொடரை உங்களுக்காக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
இரு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் விதவையான சாதனாவின் (ரச்சிதா மகாலட்சுமியின் நடிப்பில்) வாழ்க்கை சம்பவங்களையும் மற்றும் உயிரிழந்த அவளது கணவனின் நற்பெயரை சீரழித்த ஒரு வழக்கில் அவர் தவறு செய்யாத நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான அவளின் போராட்டத்தையும் இந்நெடுந்தொடர் சித்தரிக்கிறது.
இவ்வழக்கில் புலன்விசாரனையை மேற்கொள்கின்ற நேர்மையான ஊடகவியலாளரான அர்ஜுன் (விஷ்ணுவின் நடிப்பில்), சாதனாவின் போராட்டத்தில் அவர் அறியாமலேயே அப்பெண்ணின் தோழனாக மாறுகிறார். இந்த இருவரது ஆளுமைகளும் மாறுபட்டவையாக இருந்தபோதிலும், அர்ஜுன் மற்றும் சாதனா ஆகிய இருவரின் விதியும் ஒன்றாக சேர்கிறது.
இறந்துபோன அவளது கணவனின் தவறிழைக்காத களங்கமற்ற தன்மையை நிரூபிப்பதற்காக முயற்சிக்கும்போது அவளது குழந்தைகளின் தேவைகளை சாதனாவால் பூர்த்திசெய்ய முடிகிறதா? அவளது வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்குவதற்கு மற்றொரு வாய்ப்பு அவளுக்கு கிடைப்பதில் இது முடியுமா?
கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இந்த நெடுந்தொடரின் தொடக்கம் குறித்து கூறியதாவது: “வள்ளி திருமணம் மற்றும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் ஆகிய இரு வெற்றிகரமான தொடர்களை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து எமது பிரைம் டைம் நேரத்தின்போது – “இது சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் மற்றுமொரு வித்தியாசமான புதின நெடுந்தொடரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அதிகம் பேசப்படாத, குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் போராட்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும். உண்மையான அர்த்தத்தில் பெண்களின் திறனதிகாரத்தை உருவகப்படுத்தும் “இது சொல்ல மறந்த கதை” தான் இழந்துவிட்ட அனைத்தையும் மீண்டும் பெறுவதற்கு மனஉறுதியோடு போராடவும் மற்றும் வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்பை இதன்மூலம் தனக்கு வழங்குகின்ற ஒரு இளம் விதவைத் தாயின் போராட்டத்தை நேர்த்தியாக சித்தரிக்க முற்படுகிறது.
தைரியம், மனத்திடம் மற்றும் சுதந்திரமாக செயல்படும் உணர்வை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் பார்வையாளர்கள் மனதில் தொடர்ந்து நிலைக்கின்ற சிந்தனைகளையும், மனப்பதிவுகளையும் இந்நிகழ்ச்சி உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.
இந்த நெடுந்தொடரின் இயக்குனர் ஆனந்த் பாபு பேசுகையில், “தனது குடும்பத்தை பாதுகாக்க எதையும் செய்ய துணிவு கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை சித்தரிப்பதன் மூலம் பெண்களின் வலுவான பண்புகளை முன்னிலைப்படுத்துகின்ற “இது சொல்ல மறந்த கதை” என்ற இந்த நெடுந்தொடரை இயக்குவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. பல பெண்களால் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் கடும் போராட்டங்கள் மற்றும் சவால்களை அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
இந்நிகழ்ச்சியின் மூலம், கடும் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய ஒரு பெண்ணால் மன உறுதியும், தைரியமும் மிக்க பெண்ணாகவும் இருக்கமுடியும் என்ற உண்மையை வலியுறுத்திச் சொல்ல நாங்கள் முயற்சித்திருக்கிறோம். இச்சிறப்பான வாய்ப்பை தந்ததற்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்நெடுந்தொடர் பற்றி கூறியதாவது: “நியாயமான, கனிவான, தைரியமான மற்றும் விவேகமான பெண்ணாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது. அவளது மனதில் பட்டதைப்பேச சிறிதளவும் அஞ்சாத இவள், அவளது குடும்பம் அல்லது சமுதாயம் ஆகியவற்றினால் எதிர்கொள்கின்ற சவால்களினால் துவண்டுவிடாது, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காத பெண்ணாக சாதனா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
“இது சொல்ல மறந்த கதை” என்ற நெடுந்தொடரின் மூலம், சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறுவதில் போய் முடிந்தாலும் கூட அவளுக்கென தனிப்பட்ட ஒரு முடிவை எடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது என்ற செய்தியினை வலியுறுத்திச் சொல்ல நாங்கள் முனைந்திருக்கிறோம்,” என்று கூறினார்.
பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு பேசுகையில், “உறுதியான நன்னெறி மற்றும் கோட்பாடுகளை கொண்டிருக்கின்ற ஒரு ஊடகவியலாளர் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது இதுவே முதன்முறை. நேர்மையும் மற்றும் உண்மைக்கான தளராத விருப்பமுமே இதுவரை நான் நடித்திருக்கும் பிற கதாபாத்திரங்களிலிருந்து அர்ஜுனை தனித்து சிறப்பாக காட்டுகிறது.
ஆகவே “இது சொல்ல மறந்த கதை” என்பதில் முக்கிய பாத்திரத்தில் இடம்பெறுவது உற்சாகமும், மகிழ்ச்சியும் தருகிறது. இந்நெடுந்தொடரில் வருகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறப்பான பங்களிப்பை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.
கணவன் இல்லாமல் தனித்து வாழ்கின்ற ஒற்றை பெற்றோரான ஒரு பெண் குறித்து சமுதாயத்தின் கண்ணோட்டத்தை படம்பிடித்துக் காட்டிய புரமோ அறிமுகத்தைத் தொடர்ந்து ஆதித்யா (சாத்விக் நடிப்பில்) மற்றும் அக்ஷரா (அர்ஷிதா நடிப்பில்) இரு இளவயது கதாபாத்திரங்களை அறிமுகம் செய்கின்ற அதன் பின்தொடர் புரமோவையும் கலர்ஸ் தமிழ் வெளியிட்டிருந்தது. அவர்களது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் மீது இந்த இளவயது நபர்களின் தனித்துவமான கண்ணோட்டத்தை அது நேர்த்தியாக எடுத்துரைத்தது.
கணவனை இழந்து, தன்னந்தனியாக குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கும் மற்றும் பார்ப்பவர்களின் சிந்தனையைத் தூண்டும் இந்நெடுந்தொடர், 2022 மார்ச் 7, திங்களன்று முதன்முறையாக ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 9.00 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.
வழக்கமானவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரமான சாதனாவின் வித்தியாசமான வாழ்க்கைக்கதையை கண்டுரசிக்க 2022 மார்ச், 7 திங்கள்கிழமை இரவு 9.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.