இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் அதிகம் புழங்கப்பட்ட வார்த்தை எதுவென கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் தறுதலை என. பாலாஜி ஆரம்பித்து வைத்தது சனத்தின் அழுகையில் முடிந்து, பின்னர் ஆரி சொல்லி கடைசியில் சம்யுக்தா பக்கம் வந்து பாலாஜியையும் அசைத்து பார்த்து விட்டு இப்போது தான் ஓய்ந்தது.
ஆனால் அந்த வார்த்தையால் கண்டெண்ட் மழை கொட்டு, கொட்டென கொட்டியதால் பிக்பாஸ் அதை வைத்து அவரின் திருவிளையாடலை நேற்று காட்டினார். நேற்று ஜீவா நடிப்பில் 'ஆத்தங்கரை ஓரத்தில்' பாட்டை பிக்பாஸ் போட அனைவரும் ஜாலியாக டான்ஸ் ஆடினர். ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட். உன்னால தறுதலை ஆனேனே என பாடலில் ஒலித்தது.
That morning song in today’s episode. How many of noticed that “tharudhala” word in the song 🤭😁. Timing song oh 👏😂@vijaytelevision
— harini ✨🦋 (@Harini____) November 5, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் என்னடா தேடிப்புடிச்சு இந்த பாட்டை போடுறீங்கன்னு பார்த்தோம். இப்போ தானே தெரியுது உங்க திருவிளையாடல் என பிக்பாஸை கிண்டலடித்து வருகின்றனர். வேறு சிலரோ இதுல காட்டுற கிரியேட்டிவ்ல கொஞ்சம் டாஸ்க்ல காட்டுங்க பாஸ்! பேசியே கொல்றாங்க எல்லாரும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக்பாஸ் கருணை காட்டுவாரா?