எந்த அணியிலும் சேராமல் பரமபதம் ஆடிவரும் ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பாலாஜிக்கு தீவிர ஆதரவு அளித்து வருகிறார். இதற்காக அவரிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்த ஆரியை அவர் தொடர்ந்து டார்கெட் செய்யவும் தவறவில்லை. மேலும் சம்யுக்தா, ஆரி குறித்து பேசிய விஷயத்தை இதுவரை அவர் வெளியில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யோவ் #JithanRamesh பலே ஆளுய்யா நீ சைலண்டா இருந்தாலும் #RamyaPandian யே ஒத்துக்க வெச்சிட்டியே வேற லெவல் 😂😂😂😂#RamyaPandian #JithanRamesh #BigBoss4Tamil pic.twitter.com/XBJ7KJc7lR
— Sidharth Sidhu (@Sidhuu52) November 25, 2020
இந்த நிலையில் டெலிகாலர் டாஸ்க்கில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யாவை, ஜித்தன் ரமேஷ் தலையால் தண்ணீர் குடிக்க வைத்து விட்டார். இதுதவிர சைலண்ட் கில்லர், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார் என்பது ஆகியவற்றை ரம்யாவின் வாயாலேயே ஒப்புக்கொள்ள செய்த ரம்யா, கடைசியில் ரமேஷின் பொறுமையை பாராட்டி அவருக்கு 5 ஸ்டார்கள் அளித்தார்.
ரமேஷ் தனக்கு வீசப்பட்ட தூண்டிலை வைத்தே மேலேறி விட்டார். தன்மீது ரம்யா வைத்த விமர்சனங்களையும் அவர் ஏற்றுக்கொண்டதால் கடைசியில் என்ன செய்வது என தெரியாமல், உங்கள எப்படி போன வைக்க சொல்றதுன்னு தெரியல என ரம்யா சுயவாக்குமூலம் அளித்து சமாளித்தார். வெற்றிகரமாக ரம்யாவை நாமினேஷனில் சிக்கவைத்த ரமேஷை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.