பிரீஸ் டாஸ்க்கில் நேற்று ஆரியின் மகள் ரியா மற்றும் அவரது மனைவி நதியா இருவரும் வந்திருந்தனர். முதலில் எண்ட்ரி கொடுத்த ரியாவை பார்த்து ஆரி ஆனந்த கண்ணீர் வடித்தார். தொடர்ந்து ரியாவை அழைத்த பிக்பாஸ் அம்மாவை அழைத்து வாங்க என சொல்ல, ரியா சென்று நதியாவை அழைத்து வந்தார். பின்னர் இருவரும் அமர்ந்து பேசும்போது, நான் எதுவும் சொல்ல விரும்பல.
நீங்க நல்லா வெளையாடுறீங்க. ஆனா சில இடங்கள்ல கவலைப்பட்டீங்க. அது கொஞ்சம் வருத்தமா இருந்தது என நதியா கலங்கினார். அதற்கு ஆரி இதெல்லாம் தெரிஞ்சு தான் உள்ள வந்தேன். மரியாதைய கேட்டு வாங்கக்கூடாது நாம தான் சம்பாதிக்கணும் என்றார். பின்னர் பாலாஜி, ரம்யா, ஷிவானி ஆகியோருடன் அமர்ந்து நதியா பேசினார். அப்போது நீங்க நல்லா வெளையாடுறீங்க.
#Aari - மரியாதையா கேட்டு வாங்க கூடாது நாமத சம்பாதிக்கணும்💯💯#BiggbossTamil4 #Biggboss4Tamil #AariArjunan
— jaya (@Arjunan_Aari1) December 31, 2020
ஆனா இந்த கேம்க்கு அது பத்தாது. இன்னும் நல்லா விளையாடணும் என ஷிவானிக்கு ஆறுதலாக பேசினார். ரம்யாவை ஆல்ரவுண்டர் என்றும் பாராட்டினார். இதைப்பார்த்த ரசிகர்கள் எங்க ஆரி அண்ணா மாதிரி அவங்க பொண்ணும், மனைவியும் இருக்காங்க. சூப்பர் குடும்பம் என பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ரியாவின் குறும்புத்தனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.