பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இரண்டு நபர்களாக ஆரி, பாலாஜி இருவரையும் சக போட்டியாளர்கள் தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றும் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் பேசிக்கொண்டிருக்கும் போது ஆரி, பாலாஜியை சோம்பேறி என சொல்லிவிட அவ்வளவு தான்.
ஆத்திரம் பாலாஜிக்கு கண்ணை மறைத்து விட்டது போல. தான் அணிந்திருந்த மைக்கை கழட்டி உடைத்து விட்டார். மேலும் மரியாதை கெட்டு போயிரும் என்று ஆரியை சகட்டுமேனிக்கு பேசி, கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார். நான் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கறேன் என சொல்லி, ஆரி மன்னிப்பு கேட்டும் கூட பாலாஜி அவ்வளவு எளிதாக இந்த விஷயத்தை விடவில்லை.
Oh #Balaji words please #BiggBossTamil4 #BiggBossTamil this is too much "mariyatha kettu poidum" lam over
— 𝓢𝓱𝓲𝓿𝓪 (@_ItzShiva_) January 1, 2021
இதனால் தற்போது #BalajiMurugaDoss மற்றும் #AariArujunan இருவரும் இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். பாலாஜியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்துள்ளது. இந்த வார இறுதியில் பாலாஜியின் இந்த செயலை கமல் கண்டிப்பாரா? காத்திருந்து பார்க்கலாம்!