கொரோனா சூழலால் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கத் தொடங்கியது.
அதில் ஒரு முக்கியமான ஓடிடி தளமான, நெட்ஃபிளிக்ஸ், 20 கோடி சந்தாதாரர்களை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் இந்தியாவில் தமது மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது.
இதுவரை ரூ.200 இருந்து வந்த மொபைல் பிளான் கட்டணம், இப்போது ரூ. 149-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பிளானை ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டும் மொபைல் அல்லது டேப்லட்டில் பயன்படுத்த முடியும். இதே போல இதுவரையில் மாதம் ரூ.499 என்று கட்டணம் வசூலிக்கப்பட்ட பேசிக் பிளான் இப்போது ரூ.199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாதம் ரூ.649 ஆக இருந்த ஸ்டாண்டர்ட் பிளானும் இப்போது அதிரடியாக ரூ.499 ஆகவும், ரூ.799 ஆக இருந்த பிரீமியம் பிளான் இப்போது ரூ.649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, நியூ இயர் நெருங்கும் இந்த வேளையில், ஸ்டிரீமிங் சேவை தளமான நெட்ஃபிளிக்ஸ் மொபைல் திட்டத்திற்கான கட்டணத்தை மாதம் ரூ.149 ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது , திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்ப்பவர்க்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி வெள்ளிக்கிழமைகளில் ஆரன்யாக், சனிக்கிழமைகளில் மணி ஹீஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்கும் சந்தாதாரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் வார இறுதி நாட்களின் எண்டர்டெயின் தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த அதிரடி விலை மாற்றம், இந்த டிசம்பர் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்து, அடுத்த மாத பில் சுழற்சியில் இருந்து கணக்கில் கொள்ளப்படுவதாக தெரிகிறது.
புதிய உறுப்பினர்கள் இந்த கட்டண முறையிலும், ஏற்கனவே நெட்ஃபிளிஸ் சந்தாதாரராக இருந்தால், அதே கட்டணத்தில் அடுத்த பிரிவிலும் நெட்ஃபிளிக்ஸ் அவர்களுக்கு அப்கிரேடு ஆகும் என்றும் தெரிகிறது. விகிதச்சாரப்படி, நெட்ஃபிளிக்ஸ் தனது பல்வேறு பிரிவுகளில் கட்டணத்தை 18 முதல் 60 சதவீதம் வரை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.