பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதிலிருந்து தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று புதிய கல்விக்கொள்கையை வெளியிடுவதாக அறிவித்தது.இதற்கு வைரமுத்து நேருவை பிடிக்குமோ பிடிக்காதோ ஆனால் அவரது வாக்குறுதி பிடிக்காமல் இருக்கக்கூடாது என வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நெடுங்காலமாக இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இந்தியை அனைத்து மாணவர்களும் கட்டாயம படிக்கவேண்டுமென கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள இரு மொழிகளுடன் இந்தியும் சேர்ந்தால் 3வது மொழியாக அது திணிக்கப்படுவதாகும்.
இப்புதிய கல்விக்கொள்கையில் 8 ஆம் வகுப்புவரை ஹிந்தி கட்டாயம் என்று இதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் தற்போது இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி.மத்திய அரசுக்கு நேருவைப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது.நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை
இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது
நேருவின் வாக்குறுதி.
மத்திய அரசுக்கு நேருவைப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது.
நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது.
— வைரமுத்து (@vairamuthu) June 1, 2019