விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா என் நிகழ்ச்சி தமிழகத்தின் முன்னணி டாக் ஷோ நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது.
Also Read | பிரபல OTT-யில் ரிலீசாகும் சாய் பல்லவி நடித்த 'கார்கி'.. எப்போ? எதுல?
பிரபல பேச்சாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இரு தரப்பினர் கலந்து கொண்டு தத்தம் பார்வையை சமகாலத்துக்கு தகுந்தாற்போல் எளிமையான மொழியில் சுருக்கமாக முன்வைப்பர். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை, பேசு பொருளாக மாற்றி ஒவ்வொரு படிநிலைகளாக, எடுத்துக் கொண்ட தலைப்பை விவாதிப்பதே இந்த நிகழ்ச்சியின் அம்சம்.
அப்படி பல்வேறு அறிவுப்பூர்வமான & அத்தியாவசியான விவாதங்களை நிகழ்த்திய நீயா நானா நிகழ்ச்சியில் தற்போது குழந்தைகளின் பிரச்சனைகளை அவர்களின் பெற்றோர் முன்னிலையில் கேட்டறிந்து அது குறித்து பெற்றோர்களிடம் கேள்வி கேட்கும் கலகலப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விவாத நிகழ்ச்சியில், ஒரு குழந்தையை கோபிநாத், “ஏன் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் உணவுகளை சாப்பிட்டு முடிப்பதில்லை?” என்று ஒவ்வொரு குழந்தையாக கேட்கிறார். அதில் சில குழந்தைகள், “உணவு இடைவேளை என்பது மிகவும் குறுகலான நேரத்துடன் இருக்கிறது.. சாப்பிட்டு முடிவதற்குள் உணவு இடைவேளை முடிந்து விடுகிறது” என்று புகார்களை வைத்திருந்தனர்.
இதுபோல் இன்னொரு குழந்தை கோபிநாத்தின் கண் முன்னாலேயே தன் அம்மாவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்கக்கூடிய வீடியோ தற்போது ப்ரோமோவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி அந்த குழந்தை பேசும்போது, “ஸ்கூலுக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் என் டிபன் பாக்ஸை திறந்தால் தயிர் சாதம் தண்ணீர் போன்று இருக்கும்.. என் நண்பர்கள் என்னிடம், ‘உங்கள் அம்மா youtube சேனல் ஏதேனும் வைத்திருக்கிறாரா?’ அதற்காக சமைத்ததா இது ? ஏன் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல, அதற்கு அந்த குழந்தையின் அம்மா, “தயிர் சாதத்தில் கொஞ்சமாக பால் சேர்ப்பேன்” என்று பதில் கூற, அதற்கு கோபி முன்னிலையில் அந்த சிறுமி, “அதற்கென்று இவ்வளவு தண்ணீர் ஊற்றுவீர்களா?” என்று கடிந்து கொள்கிறார்.
இதேபோல் தனக்கு பிடித்த மிகவும் பிரியாணி எடுத்துச் சென்றால் கூட அதுவும் காரமாக இருப்பதாக சொல்லிவிட்டு வந்து விடுகிறாள். நேரடியாக காரம் கொடுத்தால் குழந்தைகள் எடுத்துக் கொள்வதில்லை, எனவே மிளகு தட்டி பொடியாக்கி போட்டு விடுவேன் என்று பதில் கூறுகிறார். அதற்கு அந்த குழந்தையும் சளைக்காமல், “பின்ன மிளகு வாசம் வீசாதா.. அவ்வளவு காரம்” என்று பதில் சொல்கிறார்.
இதேபோல் ஒழுக்கமாய் உணவுகளை உண்டுவிட்டு வந்தால், அடுத்த நாள் காலை சீஸ் பால் செய்து தரவேண்டும் என்கிற சிறுமியின் நிபந்தனைகள் சில நேரம் நிறைவேற்றப்படுவதாக அவரது அம்மா குறிப்பி, அதற்கும் அந்த சிறுமி, “அதுவும் சில நேரம் தானா? அப்படி பார்த்தால் அந்த சில நேரம் வந்ததே இல்லையே? நீங்க செஞ்சு கொடுத்ததே இல்லையே?” என்று ஏகத்துக்கும் பங்கம் பண்ணுகிறார்.
என்னதான் அம்மாவிடம் குழந்தை இப்படி நேருக்கு நேர் வாய் பேசி சண்டை போட்டாலும் குழந்தைகள் இப்படி பேசுவது பார்ப்பதற்கு கலகலப்பாக இருப்பதாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது.
Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. வில்லனாக மிஷ்கின்! வெளிவந்த கொலமாஸ் அப்டேட்