Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top
www.garudavega.com

"8 வருஷத்துக்கு முன்னாடி இதே நேரத்துல".. திருமண நாளில் நஸ்ரியா வெளியிட்ட க்யூட் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பகத் ஃபாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோருக்கு திருமணமாகி, 8 ஆண்டுகள் ஆன நிலையில், நஸ்ரியா தற்போது பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Nazriya shares video with fahadh on their 8th wedding anniversary

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆகவும், பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை நஸ்ரியா.

இதனைத் தொடர்ந்து, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடித்திருந்த 'நேரம்' படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

இதன் பின்னர், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்த நஸ்ரியா, தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21 ஆம் தேதி, மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரியா.

Nazriya shares video with fahadh on their 8th wedding anniversary

அதன் பின்னர், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை நஸ்ரியா, 'கூடே' என்னும் திரைப்படத்திலும், அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து, 'Trance' என்னும் படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நானியுடன் இணைந்து தெலுங்கில் நஸ்ரியா நடித்திருந்த 'அண்டே சுந்தரனகி' திரைப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஒரு சில திரைப்படங்களில் அவ்வப்போது நஸ்ரியா நடித்து வந்தாலும், அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். குடும்பத்துடன் வெளியே செல்லும் புகைப்படங்கள், திரைப்படம் குறித்த அப்டேட் என பல விஷயங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில், கணவர் மற்றும் நடிகரான பகத் ஃபாசிலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Nazriya shares video with fahadh on their 8th wedding anniversary

இந்நிலையில், தற்போது தங்களின் திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், கணவர் பகத் பாசிலுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்றை நேற்று பகிர்ந்த நஸ்ரியா, தனது கேப்ஷனில், "8 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இந்த நேரத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இது ஒரு சிறந்த பயணமாக உள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

 

மலையாள சினிமாவின் சிறந்த ஜோடியான பகத் - நஸ்ரியாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் திருமண நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya shares video with fahadh on their 8th wedding anniversary

People looking for online information on Fahadh Faasil, Nazriya nazim, Wedding anniversary will find this news story useful.