நடிகை நஸ்ரியா தனது கணவர் பஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read | நீச்சல் குளத்தில் கணவர் நிக் ஜோன்ஸ் & குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா.. UNSEEN PHOTO!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏற்கனவே கேரளா முழுவதும் அறியப்பட்டவர் தான் நஸ்ரியா.
தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பகத் பாசில் உடன் நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.
இந்நிலையில் இன்று பஹத் பாசிலின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் கணவர் பஹத் பாசிலுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கணவரே.. ஒயின் போல வயதாக வயதாக இன்னும் சிறப்பாக இருக்கும். சிறந்ததை இனிமேல் தான் காணப்போகிறீர்கள்!" என நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
Also Read | Monochrome போட்டோஷூட்டில் மாஸ் காட்டிய ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தானா? வெளிவந்த செம போட்டோஸ்