தமிழ்த் திரைப்படத் துறையில் அண்மையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதில் நயன்தாராவும் நடிகர் விஜய் சேதிபதி மற்றும் நடிகை சமந்தா ஆகியோருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பல வருடம் முன்பு விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுக்கும், அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து, இந்த தம்பதியர் அண்மை காலமாக திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (ஜூன் 9-ஆம் தேதி) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது. திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
முன்னதாக திருமணத்துக்கு முன்னதாகவே குலதெய்வம் கோவில், திருப்பதி கோயில் என பல்வேறு தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர், தற்போது ஜூன் 9-ஆம் தேதி நடந்த திருமணத்தைத் தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இதனை அடுத்து சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன், அவருடைய மனைவியும் நடிகையுமான நயன்தாரா, மஞ்சள் புடவையில் மங்களகரமாக வந்திருந்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல தாஜ் க்ளப்ஹவுஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தம்பதி சகிதமாக ஜோடியாக சந்தித்தனர். இதில் பத்திரிகையாளர்களுடன் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “அனைவரும் வந்திருக்குறதுல ரொம்ப சந்தோஷம்... அனைவருக்கும் நன்றி.. எல்லாரும் சாப்டீங்களா? .. நன்றி.. ப்ரஸ் மீட் நிகழ்ற இந்த ஹோட்டல்ல தான் இவங்கள முதல் முதலில் சந்திச்சு கதை சொன்னேன். அதுக்காக தான் இங்கயே இந்த சந்திப்பை நிகழ்த்தனும்னு நெனைச்சோம்.. .. திருமணத்துக்கு உங்கள் அன்பும், ஆதரவும் கொடுத்தீங்க. நன்றி, இதுக்கு அப்றம் வாழ்க்கைக்கும் சரி, புரொஃபஷனல் கரியருக்கும் சரி உங்க சப்போர்ட் தேவை. நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.