www.garudavega.com

நீண்ட கால தோழியை திருமணம் செய்த "நயன்தாரா - டாப்சி" பட இயக்குனர்! சினிமா பிரபலங்கள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிச்சேரி: தனது நீண்ட கால தோழியை திருமணம் செய்துள்ளார் பிரபல இயக்குனர்.

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

அடேங்கப்பா.. ரஜினிக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? செம்ம!

நயந்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டி வெளியான மாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இது நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’. சில காரணங்களால் இந்தப் படம் இன்று வரை வெளியாக இல்லை.

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

 

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது. இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி பன்னு நடித்திருப்பார்.இந்த படத்தில் அஸ்வின் சரவணனுடன் சேர்ந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் காவ்யா ராம்குமார்.

இந்த காவ்யா ராம்குமாரை தான் அர்ஜூன் சரவணன் பாண்டிச்சேரியில் நேற்று (30.01.2022) கரம் பிடித்துள்ளார். பாண்டிச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பேனா, பேப்பருடன் தொடங்கிய இந்த உறவு கவிதையில் முடிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் என்னோடு சேர்ந்து புயலை கடக்கும் உனக்கு மிக்க நன்றி. அதிலும் கொரோனா மூன்றாம் அலை சமயத்தில் உன்னோடு திருமணம் செய்வதே ஒரு சாகசம் செய்வது போல இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன, இந்த படத்தில் அனுபம் கேர், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

நடிகை கொடுத்த புகார்.. தயாரிப்பாளர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது... திடுக்கிடும் தகவல்..!

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

 

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Tapsee Movie Director Ashwin Saravanan Married

People looking for online information on Ashwin Saravanan, அஸ்வின் சரவணன், நயந்தாரா, மாயா, Nayanthara, Tapsee will find this news story useful.