கோலிவுட்டில் க்யூட் ஜோடிகளாக வலம் வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர், கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
Also Read | ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!
விக்கி - நயன் திருமணத்தில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, அட்லி, அனிருத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.
தாங்கள் ஜோடியாக பல இடங்கள் சுற்றித் திரிந்தது தொடர்பான புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். தேனிலவுக்கு பின் இந்தியா திரும்பிய நயன்தாரா, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தமிழில் நடிகை நயன்தாரா நடித்து வரும் படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள அஹமது இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் 'இறைவன்' படப்பிடிப்பு தற்போது ECR-ல் வைத்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் படப்பிடிப்பில், தற்போது நயன்தாரா இணைந்து நடித்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | விஷால் - S.J. சூர்யா நடிக்கும் "மார்க் ஆண்டனி ".. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல முன்னணி நடிகை!