தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சமீபத்தில் நண்பர்களுடன் ஆம்ஸ்டர்டேம் சுற்றுலா சென்று வந்த நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்.
சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர். பின்னர், ரசிகர்களின் வேண்டுகோளையடுத்து, அவர்களுடன் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று (அக்.25) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான பிகில் திரைப்படத்தை தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.