Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

'நவரசா' ஆந்தாலஜி.. வைரலாகும் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, சித்தார்த் GLIMPSE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கும் 'நவரசா' என்கிற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது.

Navarasa Surya VijaySethupathi glimpse netflix நவரசா

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரிக்கும் இந்த படம் ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியெம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சராங், வி.பாபு, விராஜ் சிங் ஆகியோர் இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளர்களாகவும்,  ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன்  ஆகியோர் இசையமைப்பாளர்களாகவும் இப்படத்துக்கு பணிபுரிகின்றனர். இந்த கதை பணிகளில் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமிதரன் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

அரவிந்த்சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா, சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், பாபி சிம்ஹா, கவுதம் கார்த்தி, அசோக் செல்வன், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், சனந்த், விது மற்றும் ஸ்ரீராம் மற்றும் பலர் நடிக்கும் இந்த நவரசா ஆந்தாலஜி திரைப்படம் கொரோனாவால் துவண்டு போன திரைத்துறையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும்   FEFSI(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்) தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ரதீந்திரன் இயக்கும் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். இதேபோல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர்கள் சூர்யா, சித்தார்த், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளிவிட்டுள்ளது.

ஏதோ ஒரு கதைச் சூழலில் கதையின் மைய எமோஷனை தாங்கி நிற்கும் இந்த நாயகர்களின் கெட்டப்களே படத்தை காணும் ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ALSO READ: 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Navarasa Surya VijaySethupathi glimpse netflix நவரசா

People looking for online information on Aravindswami, Gautham Menon, Halitha Shameem, Karthik Subburaj, Navarasa, Netflix, Siddharth, Surya, Vijay Sethupathi will find this news story useful.