www.garudavega.com

NAVARASA: சித்தார்த் நடிக்கும் "இன்மை" டைட்டிலுக்கு என்ன தான் அர்த்தம்? அவரே சொன்ன விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து தயாரித்துள்ள இந்த "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று  Netflix தளத்தில் 190 நாடுகளில் வெளியாகிறது.

navarasa siddharth explanation for his part title inmai

இந்த திரைப்படத்தை மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். 

இந்த படத்தின் ஒரு பகுதியாக ரதீந்திரன் பிரசாத் இயக்கிய ‘இன்மை’ பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறும்போது,  “மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ பகுதியில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதன் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.

இன்மை என்கிற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID-ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம்” என்றார்.

ALSO READ: நவரசா-வில் அரவிந்த் சுவாமி டைரக்‌ஷனில் நடித்த ‘பிக்பாஸ்’ நடிகை.. எப்படி இருந்துச்சு? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Navarasa siddharth explanation for his part title inmai

People looking for online information on Navarasa, Siddharth will find this news story useful.