www.garudavega.com

'நவரச' நாயகன் கார்த்திக்-க்கு என்ன ஆச்சு?... 'மருத்துவமனையில்' சிகிச்சைக்காக அனுமதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனும் நடிகர் கௌதம் கார்த்திக்கின் தந்தையுமான நவரச நாயகன் கார்த்திக், தன் படங்களில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் துறுதுறுவென்று ஆக்டிவாக இருப்பார்.

Navarasa Nayagan Karthik Hospitalized surgery what happened

இந்த நிலையில்தான் அவர் தற்போது உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையில் உள்ள தம் வீட்டிலிருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நடிகர் கார்த்திக், எதிர்பாராத விதமாக கீழே தவறி விழ, அவருடைய காலில் பலத்த அடிபட்டது.

Navarasa Nayagan Karthik Hospitalized surgery what happened

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார். குறிப்பாக அவருக்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

சில வருடங்களுக்கு முன்பாக தான் கார்த்திக்கிற்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதே காலில் தான் அடிபட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நடிகர் கார்த்திக் பிரபல ஹிந்தித் திரைப்படமான அந்தாதுன் தமிழ் ரீமேக்கில், நடித்து வருகிறார்.

Navarasa Nayagan Karthik Hospitalized surgery what happened

‘அந்தகன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, சிம்ரன் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, தியாகராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

ALSO READ: நவரசா-வில் சம்பவம் செய்ய காத்திருக்கும் வேறலெவல் ‘பெண் கதாபாத்திரங்கள்’ பத்தி தெரியுமா?

'நவரச' நாயகன் கார்த்திக்-க்கு என்ன ஆச்சு?... 'மருத்துவமனையில்' சிகிச்சைக்காக அனுமதி! வீடியோ

Tags : Karthik

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Navarasa Nayagan Karthik Hospitalized surgery what happened

People looking for online information on Karthik will find this news story useful.